செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3678db7e-b958-4e3c-b5ee-a732cb776625
-

போயிங் 737 மேக்ஸ் மீதான தடையை இந்தோனீசியா நீக்கியது

ஜகார்த்தா: இந்தோனீசியா, போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது.

லயன் ஏர் விபத்தில் அதில் பயணம் செய்த 189 பயணிகள் உயிரிழந்ததையடுத்து போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு இந்தோனீசியா தடை விதித்தது.

தற்போது இந்தோனீசியா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றியுள்ளன.

மலேசியாவின் 4 மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

ஜோகூர்: மலேசியாவின் நான்கு மாநிலங்களில் நாளை மறுதினம் டிசம்பர் 31ஆம் தேதியிலிருந்து வெள்ளம் ஏற்படக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

கிளந்தான், திரங்கானு, பாஹாங், ஜோகூர் ஆகியன அந்த நான்கு மாநிலங்கள்.

மலேசியாவின் பல பகுதிகளில் தொடர்மழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தது. ஜோகூரைப் பொறுத்தவரை, ஜனவரி 1ஆம் தேதி இரவு 8 மணிவாக்கில் சுங்கை மெர்சிங் அருகே வெள்ளம் ஏற்படக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலேசிய வெள்ளத்தில் மூன்று மில்லியன் புத்தகங்கள் நாசம்

ஷா அலாம்: மலேசியாவில் அண்மையில் பெய்த மழையால் ஷா அலாமில் கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு முதல் மூன்று மில்லியன் புத்தகங்கள் பாழானது. புத்தகங்களை விற்கும் புக்ஆக்சஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான ஆண்ட்ரு யாப், ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து மதிப்பிடுவதற்கு சில காலம் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.