விரைவில் டெல்டாவை ஓமிக்ரான் விஞ்சிவிடும் சாத்தியம்

விரைவில் டெல்டாவை ஓமிக்ரான் விஞ்சிவிடும் சாத்தியம்

1 mins read
7ff2a86f-ace5-4a16-b653-ed2421ee0e7c
படம்: ராய்ட்டர்ஸ் -

உலகில், வரும் வாரங்களில் அல்லது மாதங்களில் டெல்டாவைவிட அதிகமாக ஓமிக்ரான் கிருமித்தொற்று பரவிவிடும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஓமிக்ரான் வேகமாகப் பரவுவதாக டாக்டர் செபாஸ்டின் மூரர் ஸ்ட்ரோ கூறினார்.

அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு முகவையின் உயிரியல் தகவல் பயிலகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் டாக்டர் செபாஸ்டின், ஒப்பிட்டுப் பார்க்கையில் டெல்டா கிருமி மங்கிவிடும் என்பதற்கான வாய்ப்புகள் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருவதாகக் குறிப்பிட்டார்.

தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி தலையெடுத்த ஓமிக்ரான், 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா, ரஷ்யா தென்னாப்பிரிக்கா, பிரட்டனில் ஓமிக்ரான் ஆதிக்கம் ஏற்கெனவே அதிகமாகிவிட்டதை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் மூத்த ஆலோசகர் பேராசிரியர் டேல் ஃபிஷர் சுட்டினார்.