இந்தியா: மீண்டும் 10,000ஐத் தாண்டிய கிருமித்தொற்று

இந்தியா: மீண்டும் 10,000ஐத் தாண்டிய கிருமித்தொற்று

1 mins read

பல வாரத்துக்கு பிறகு இந்தியாவில் ஒரே நாளில் 10,000க்­கும் மேற்­பட்­டோ­ருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த 24 மணி நேரத்­தில் 13,154 பேருக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக நேற்­றுக் காலை இந்­தி­யச் சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது. அந்­நாட்­டில் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 961ஆக உயர்ந்­துள்­ளது. இத­னை­ அடுத்து, மொத்த பாதிப்பு 34,822,040 ஆனது.

கிரு­மித்­தொற்­றால் மேலும் 268 பேர் இறந்­து­விட, மொத்த உயி­ரி­ழப்பு 480,860 ஆனது.

டெல்லி, மும்பை, கோல்­கத்தா, சென்னை உட்­பட 14 நக­ரங்­களில் கொவிட்-19 பர­வல் திடீ­ரென அதி­க­ரித்­துள்­ள­தால் விரைந்து நட­வ­டிக்கை எடுக்­கும்­படி எட்டு மாநி­லங்­க­ளுக்கு மத்­திய அரசு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இச்­சூ­ழ­லில், பல மாநி­லங்­களும் புதிய கட்­டுப்­பா­டு­களை அறி­வித்து வரு­கின்­றன.

ஜன­வரி 7ஆம் தேதி­வரை மும்பை நக­ரில் நால்­வ­ருக்­கு­மேல் ஒன்­று­கூட அனு­ம­தி­யில்லை. கேர­ளா­வில் நேற்று முதல் இர­வு­நேர ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் பிரிட்­ட­னில் இருந்து கோல்­கத்தா நக­ருக்கு விமா­னங்­கள் வந்­து­செல்ல மேற்கு வங்க மாநில அரசு தற்­கா­லி­கத் தடை விதித்­துள்­ளது. அத்­து­டன், அங்கு தரை­யி­றங்­கும் அனைத்­து­ல­கப் பய­ணி­கள் அனை­வ­ரும் கட்­டா­யம் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும். குஜராத்திலும் கொவிட்-19 கட்டுப்பாடுகள் ஜனவரி 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.