உலகளவில் ஆக அதிக தொற்று சம்பவங்கள்

உலகளவில் ஆக அதிக தொற்று சம்பவங்கள்

2 mins read
0d2d7756-e260-404d-9373-210382160602
வீட்டிலேயே கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்ளும் கருவிகளை வாங்குவதற்காக காத்திருக்கும் வா‌ஷிங்டன் மக்கள். படம்: ஏஎஃப்பி -

ரோம்: உல­க­ள­வில் கடந்த ஏழு நாட்­களில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் ஆக அதி­க­ள­வில் உயர்ந்துள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் தர­வு­கள் கூறு­கின்­றன.

பொரு­ளா­தா­ரத்­தைப் பாதிக்­கா­மல், ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மிப் பர­வ­லைச் சமா­ளிக்க உலக நாடு­கள் போராடி வந்­தா­லும் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்­துக்­கொண்டே இருக்­கிறது.

டிசம்­பர் 22 முதல் 28ஆம் தேதி வரை உல­க­ள­வில் ஒவ்­வொரு நாளும் சரா­ச­ரி­யாக 900,000 கிருமித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, பொலி­வியா, ஐரோப்­பிய ஒன்­றி­யம் உட்­பட பல நாடு­களில் நேற்று முன்­தி­னம் ஆக அதிக கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

மற்ற கிருமி வகை­க­ளை­விட ஓமிக்­ரான் கிருமி குறை­வான பாதிப்­பையே ஏற்­ப­டுத்­து­வ­தாக ஆய்­வு­கள் கூறி­னா­லும் அதி­க­மா­னோ­ருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­படும் போது அவர்­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க மருத்­து­வ­ம­னை­கள் திண­றக்­கூ­டும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

பிரான்­சில் நேற்று முன்­தி­னம் 208,000 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். இது அந்­நாட்­டின் ஆக அதிக எண்­ணிக்கை மட்­டு­மல்ல, ஐரோப்­பிய நாடு­க­ளி­லேயே ஆக அதி­க­மா­கும்.

அமெ­ரிக்கா, பிரிட்­டன் மட்­டு­மல்­லா­மல் இத்­தாலி, ஸ்பெ­யின், போர்ச்­சு­கல் உள்­ளிட்ட நாடு­க­ளி­லும் ஆக அதிக தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

அமெ­ரிக்­கா­வில் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று தொற்­றுக்கு ஆளா­னோர் ஏழு நாள் சரா­சரி எண்­ணிக்கை ஆக அதி­க­மாக பதி­வா­னது.

இவ்­வாண்டு ஜன­வரி மாதம் 251,232ஆக இருந்த அந்த எண்­ணிக்கை, செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று 267,000ஆக இருந்­தது.

அத்­து­டன் அமெ­ரிக்­கா­வில் டெல்டா கிரு­மி­யை­விட ஓமிக்­ரான் சம்­ப­வங்­கள் அதி­க­மாக பதி­வா­கின.

சென்ற வாரம் 23 விழுக்­கா­டாக இருந்த ஓமிக்­ரான் சம்­ப­வங்­கள், இந்த வாரம் 59 விழுக்­கா­டா­னது.

முந்திய அலையைப் ­போல் இல்லா­விட்­டா­லும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படு­வோர் விகி­த­மும் மெல்ல அதி­க­ரித்து வரு­கிறது.

பிரிட்­ட­னி­லும் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்குப் புதன்­கி­ழ­மை­யன்று, 183,037 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். நேற்று முன்­தி­னம் பதி­வா­ன­தை­விட இது 50,000 அதி­கம் என்று அர­சாங்க புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன.

அங்கு பதி­வான புதிய கிரு­மித் தொற்று சம்­ப­வங்­களில் கிட்­டத்­தட்ட 90 விழுக்­காடு ஓமிக்­ரான் உரு­மா­றிய தொற்­றா­கும்.

அயர்­லாந்­தில் 16,000க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இது கிரு­மிப் பர­வல் தொடங்­கி­ய­தில் இருந்து அங்கு பதி­வான ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று 11,300 பேர் தொற்­றுக்கு ஆளான நிலை­யில், நேற்று முன்­தி­னம் 18,300ஆக உயர்ந்­

தது.