இளையர்கள் உயிரிழப்புக்குக் கிருமித்தொற்று முதல் காரணம்

இளையர்கள் உயிரிழப்புக்குக் கிருமித்தொற்று முதல் காரணம்

1 mins read
a4f14bf9-a9dc-4d13-a1ec-af91253f8970
-

நியூ­யார்க்: உலகளவில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் விகி­தம் அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து, கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஏற்­படும் ஒட்­டு­மொத்த உயி­ரி­ழப்பு குறைந்து

உள்­ளது.

ஆனால் பெரி­ய­வர்­க­ளுக்­குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய பிறகு, அமெ­ரிக்­கா­வில் ஏற்­பட்ட இளை­யர் மர­ணங்­களுக்குக் கிரு­மித்­தொற்றே முதல் கார­ண­மாக உள்­ள­து என்கின்றன புள்ளி விவரங்கள்.

சென்ற ஆண்டு மார்ச் மாதத்­தி­லி­ருந்து இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் அனைத்து பெரி­ய­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடும் வரை, அமெ­ரிக்­கா­வில் நேர்ந்த மர­ணங்­களில் 14 விழுக்­காடு கிரு­மித்­தொற்­றால் ஏற்­பட்­ட­வை­யா­கும். தற்­போது அது 11 விழுக்­கா­டாகக் குறைந்­து

உள்­ளது.

65 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களே கிரு­மித்­தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­ப­ட­வும் உயி­ரி­ழக்­க­வும் வாய்ப்­புள்ள நிலை­யில், தடுப்­பூசி போட்டுக்­கொள்ள அவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்­ட­தால் அவ்­வயதி­னர் உயி­ரி­ழப்­பது சற்று குறைந்து

உள்­ளது.