ஜகார்த்தா: ஓமிக்ரான் கிருமிப் பரவலுக்கு மத்தியில், இந்தோனீசியா அடுத்த மாதம் முதல் கூடுதல் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கவுள்ளது.
ஆனால் இது அங்கு தடுப்பூசி சமத்துவமின்மையை பெரிதாக்கும் என்றும் கூறப்படு கிறது. அத்துடன் இன்று வரை கிட்டத்தட்ட பாதி பேர் முழுமை யாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நிலையில், போதிய தடுப்பூசி கிடைக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

