கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த போராடும் சீனா

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த போராடும் சீனா

1 mins read
9a0f2332-9868-426d-b7e7-b8e77e44bf5e
-

பெய்­ஜிங்: சீனா­வின் தொழில் நக­ர­மாக ‌ஷியா­னில் 155 புதிய தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இது இவ்­வாண்டு சீன நக­ரங்­களில் பதி­வான ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும்.

தற்­போ­தைய கிரு­மிப் பர­வ­லின் முதல் தொற்று சம்­ப­வம் அங்கு டிசம்­பர் 9ஆம் தேதி கண்­ட­றி­யப்­பட்­டது முதல் இது­வரை 1,100க்கும் அதி­க­மா­னோர் தொற்­றுக்கு ஆளா­கி­னர்.

மற்ற நாடு­களில் உள்ள கிரு­மித் தொற்று எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் இது குறைவு என்­றா­லும் கிரு­மிப் பர­வலை முற்­றி­லும் துடைத்­தொ­ழிக்க போரா­டும் சீனா, அந்­நகர மக்­களை வீட்­டி­லேயே முடக்­கி­யது.

இது மட்­டு­மல்­லா­மல், அப்­ப­குதி­யில் அடிக்­கடி கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை மேற்­கொண்டு வரும் அதி­கா­ரி­கள், நேற்று முதல் ஆறு சுற்று பரி­சோ­த­னையை நடத்தி வரு­கின்­ற­னர்.

"கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் ‌ஷியான் நக­ரம் வாழ்வா, சாவா என்ற நிலை­யில் உள்­ளது," என்று உள்­ளூர் அதி­கா­ரி­யான ஜாங் ஃபெங்கு சொன்­னார்.

கிரு­மித்தொற்று பரி­சோ­தனை மேற்­கொள்­வது, அதி­கா­ரி­கள் அனு­ம­தி­யோடு அத்­தி­யா­வ­சிய பொருட்­கள் வாங்­கு­வது தவிர, வேறு எதற்­கா­க­வும் அந்­ந­கர மக்­கள் வெளியே செல்ல முடி­யாது.

அத்­து­டன் இந்த கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக நிறு­வ­னங்­களில் ஆள் பற்­றாக்­கு­றை­யும் நில­வு­கிறது.

இந்­நி­லை­யில், முடக்­க­நிலை நீடித்­தால் தங்­க­ளது உற்­பத்தி பாதிக்­கும் என்று சாம்­சங், மைக்ரோன் நிறு­வ­னங்­கள் கூறி­யுள்­ளன.