ஹாங்காங்: ஹாங்காங்கில் ஸ்டாண்ட் நியூஸ் பத்திரிகை நிறுவன அதிகாரிகள் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மூத்த ஆசிரியர்கள் இருவர் மீது அரசாங்க கீழறுப்பு செய்திகளை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
நேற்று முன்தினம் அந்நிறுவனத்தின் ஆறு பேரை ஹாங்காங் போலிசார் கைது செய்தனர். அங்கிருந்த கைபேசி, கணினிகள், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
பத்திரிகை சுதந்திரம் மீதான சீனாவின் இந்த ஒடுக்குமுறைக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய கேரி லாம், "பத்திரிகை என்பது தேசத்துரோகம் அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் செய்தி அறிக்கை என்ற போர்வையில் தேசத்துரோக செயல்கள் மூலம் மற்றவர்களைத் தூண்டிவிடுவதை மன்னிக்க முடியாது," என்றார்.

