அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயில் நூற்றுக்கணக்கான வீடுகள் கருகியிருக்கக்கூடும் என்று அம்மாநில அதிகாரிகள் அஞ்சுகின்றனர். கடும் வறட்சியான அப்பகுதி காட்டுத்தீக்கு இரையானது. போல்டர் மாவட்டத்தில் குறைந்தது 1,600 ஏக்கர் நிலப்பகுதி எரிந்துவிட்டது. எனவே சுப்பீரியர் நகரத்தில் உள்ள ஹோட்டல்கள், கடைத் தொகுதிகளிலும் தீ பரவியதால், சிலர் உயிரிழந்திருக்கவோ, காயமடைந்திருக்கவோ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
படம்: ஏஎஃப்பி

