புயின்: லத்தீன் அமெரிக்காவிலேயே முதன்முறையாக சிலி நாட்டின் புயின் விலங்கியல் தோட்டத்தில் வளரும் விலங்குகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் வங்காள புலிக்கும் குரங்கு வகையைச் சேர்ந்த ஓரங்குட்டான், சிங்கம் என 10 விலங்குகளுக்குப் பரிசோதனை அடிப்படையில் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.
இவற்றுக்கு டிசம்பர் 13ஆம் தேதி முதல் முறை தடுப்பூசி போடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரண்டாவது முறை தடுப்பூசி போடப்பட்டது.
அமெரிக்காவின் சில விலங்கிய தோட்டங்களும் விலங்குகளுக்குத் தடுப்பூசி போடப் போவதாகக் கூறியுள்ளன.
சிலியில் மூன்று வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 விழுக்காட்டு மக்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

