தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூயார்க்கில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சீன குடியேறி மரணமடைந்தார்

1 mins read
9538210d-4db6-4416-abc3-7cbd31c48f5d
நியூயார்க்கில் சிகிச்சை அளிக்கப்பட்ட யாவ் பான் மா. படம்: இணையம் -

கடந்த ஏப்ரலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யாவ் பான் மா டிசம்பர் 31ஆம் தேதி மரணமடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

நியூ­யார்க்: கடந்த ஏப்­ரல் மாதம் ஈஸ்ட் ஹார்­லெ­மில் தள்ளுவண்டியில் காலி போத்­தல்­க­ளை­யும் ேகன்­களை­யும் சேக­ரித்­துக்கொண்­டி­ருந்த சீன குடி­யே­றி­யான யாவ் பான் மா, 61, கொடூ­ர­மா­கத் தாக்­கப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் நாடு முழு­வ­தும் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட நிலை­யில் அவர் சுவா­சக் கரு­வி­யு­டன் சிகிச்சை அளிக்­கப்­பட்­டார். அவ­ரது தலை­யில் பலத்த காயம் ஏற்­பட்­டி­ருந்­தது என்­றும் மூளை­யில் ரத்­தக் கசி­வும் இருந்­தது என்­றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இந்­நி­லை­யில் சிகிச்சை பல­னின்றி டிசம்­பர் 31ஆம் தேதி அவர் மர­ண­ம­டைந்­தார் என்று நியூ­யார்க் நகர காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் கைது செய்­யப்­பட்ட 49 வயது ஜரோட் போவல் மீது கொலை முயற்சி, தாக்­கு­தல், வெளி­நாட்­ட­வ­ருக்கு எதி­ரான வெறுப்பு உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

இதற்கிடையே மேன்ஹேட்டன் மாவட்ட தலைமைச் சட்ட அலு வலகம் அவர் மீதான குற்றச்சாட்டை கொலைக் குற்றச்சாட்டாக மாற்ற முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.