சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தரைவழி தடுப்பூசி பயணத்தடத்தின் கீழ், சீனப் புத்தாண்டு நேரத்துக்கான அனைத்து பேருந்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
விற்று முடிந்தவரை அனைத்தும் பிப்ரவரி 1 முதல் 6 தேதி வரைக்குமான டிக்கெட்டுகள் ஆகும்.
இவ்வாண்டின் சீனப் புத்தாண்டு பிப்ரவரி 1, 2 தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
அதனால் மலேசியா செலும் பேருந்து டிக்கெட்டுகளுக்கு அதிக கிராக்கி.
காஸ்வே லிங்க் பேருந்து நிறுவனம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு டிக்கெட்டுகளை விற்கத் தொடங்கியது.
சில மணி நேரங்களுக்குள் பிப்ரவரி 1 முதல் 6 வரையிலான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் திர்ந்துவிட்டன.
அந்தத் தேதிகளுக்கான பேருந்து டிக்கெட்டுகளை டிரான்ஸ்ஸ்டார் எனும் நிறுவனம் கடந்த வாரம் விற்றது.
அந்த டிக்கெட்டுகளும் தீர்ந்துபோய்விட்டன.
உலகளவில் அதிரித்து வரும் ஒமிக்ரான் கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தரைவழி தடுப்பூசி பயணத்தடத்திற்கான புதிய டிக்கெட்டுகளை விற்க ஜனவரி 20ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.
ஜனவரி 21ஆம் தேதி முதல் இருநாட்டு மக்கள் போக்குவரத்து எண்ணிக்கையைத் தற்காலிகமாக பாதியாகக் குறைத்தது.
காஸ்வே லிங்க் பேருந்து டிக்கெட்டுகளின் விற்பனை இன்று தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பாதிக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
தேவை அதிகமாக இருந்தாலும் அரசு நிர்ணயித்த எண்ணிக்கைக்கு மேலாக தங்களால் டிக்கெட்டுகளை விற்க முடியாது என்றும் அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
பிப்ரவரி 1 முதல் 6 வரைக்குமான தேதிகளுக்கு தினந்தோறும் 1,080 டிக்கெட்டுகளை மட்டும் தங்களால் விற்க முடியும் என்றார் அவர்.

