தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனிதனுக்குப் பன்றியின் இதயத்தைப் பொருத்தி மருத்துவ உலகம் சாதனை

1 mins read
0a54df4e-afd4-49bc-a7c4-45bb79aedf1e
அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் குழு. -

முதன்முறையாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மருத்துவ உலகம் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தலான இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த, அமெரிக்காவின் மேரிலாண்டைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பெனட்டுக்குப் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது.

பால்டிமோரில் நடந்த இந்த எட்டு மணி நேர அறுவை சிகிச்சையை மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவ நிலைய வல்லுநர்கள் மேற்கொண்டனர்.

பன்றி இதயம் பொருத்தப்பட்ட திரு பென்னட் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கானோரிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

-