ஓமிக்ரான் பரவல்: 3.1 மில்லியன் பேர் வேலைக்குச் செல்லவில்லை

லண்­டன்: பிரிட்­ட­னில் ஓமிக்­ரான் வகைக் கிரு­மி­யின் பர­வ­லால் இவ்­வாண்டு ஜன­வரி முதல் வாரத்­தில் வேலைக்­குச் செல்­லா­த­வர்­க­ளின் எண்­ணிக்கை வெகு­வாக உயர்ந்து உள்ளது.

அந்­நாட்­டில் மொத்­தம் 3.1 மில்­லி­யன் பேர் கடந்த வாரம் வேலைக்­குச் செல்­லா­மல் இருந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று குட்­ஷேப் எனும் பகுப்­பாய்வு நிறு­வ­னம் கூறி­யது.

பிரிட்­டிஷ் ஊழி­யர்­க­ளி­டையே வேலை தொடர்­பான நோய்­க­ளை­யும் அவர்­க­ளின் நல­னை­யும் கண்­கா­ணித்து வரும் குட்­ஷேப் நிறு­வ­னம், புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னத்­துக்­காக இந்த பகுப்­பாய்வை நடத்­தி­யது.

சுமார் 3.1 மில்­லி­யன் பேர் வேலைக்­குச் செல்­லா­த­தால் பிரிட்­டிஷ் பொரு­ளி­யல் சுமார் 1.3 பில்­லி­யன் பவுண்டை (2.4 பில்­லி­யன் சிங்­கப்­பூர் வெள்ளி) இழந்­த­தாக அது மதிப்­பிட்­டது.

குறிப்­பாக ஜன­வரி 3 முதல் 9 வரை சுமார் 1.6 மில்­லி­யன் பேர் வேலைக்­குச் செல்­ல­வில்லை என்று நிறு­வ­னம் கூறி­யது. அது கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது 18 விழுக்­காடு அதி­கம்.

பிரிட்­ட­னில் ஜன­வரி 4ஆம் தேதி ஆக அதி­க­மாக 218,724 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று பதி­வா­னது.

கொவிட்-19 அதி­க­ரிப்­பால் மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை உயர்ந்து வரும் நிலை­யில் அங்கு ஊழி­யர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ள­தை­யும் மருத்­து­வ­மனை கட்­ட­மைப்­பின் மீது பெரும் அழுத்­தம் ஏற்­பட்­டுள்­ள­தை­யும் இது காட்டு­வ­தாக குட்­ஷேப் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!