$12 சுற்றுலாக் கட்டணம் வ‌சூலிக்க தாய்லாந்து திட்டம்

$12 சுற்றுலாக் கட்டணம் வ‌சூலிக்க தாய்லாந்து திட்டம்

1 mins read
f86c0e98-f3fc-4fcc-b79c-0772af25d429
-

பேங்­காக்: வெளி­நாட்டு சுற்­று­லாப் பய­ணி­க­ளி­டம் வரும் ஏப்­ரல் மாதத்­தில் இருந்து சுற்­றுலாக் கட்­ட­ண­மாக 300 பஹட் (12 சிங்­கப்­பூர் வெள்ளி) வ‌சூ­லிக்க தாய்­லாந்து திட்­ட­மி­டு­வ­தாக மூத்த அதி­கா­ரி­கள் கூறி­னர். இது சுற்­று­லாத் தளங்­களை மேம்­ப­டுத்­த­வும் எதிர்­பா­ராத விபத்­துக்கு உள்­ளா­கும் சுற்­றுப் பய­ணி­களின் மருத்­துவ செல­வுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் என்றனர் அவர்கள்.

"காப்­பு­று­தி­யில் இடம்பெறாத சில அம்சங்களால் பய­ணி­கள் பாதிக்­கப்­ப­டும்­போது, அவர்­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­வது எங்­க­ளின் சுமை­யா­கி­வி­டு­கிறது," என்­றார் தாய்­லாந்து சுற்­றுலா ஆணை­யத் தலை­வர். இந்­தக் கட்­ட­ணம் விமான டிக்­கெட்­டு­டன் சேர்த்து வசூ­லிக்­கப்­படும். இவ்­வாண்டு 5 முதல் 15 மில்­லி­யன் வெளி­நாட்­டுப் பய­ணி­கள் வரு­வார்­கள் என்று அந்நாடு எதிர்பார்க்கிறது.