ஆஸ்திரேலியாவில் சுகாதார நெருக்கடி

ஆஸ்திரேலியாவில் சுகாதார நெருக்கடி

2 mins read
dd455f71-dac6-474a-9e4c-5428198dafc9
-

சிட்னி: கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பாடு­க­ளைத் தளர்த்தி வரும் ஆஸ்தி­ரே­லி­யா­வில் தற்­போது தேசிய சுகா­தார நெருக்­கடி நிலவு­கிறது.

இரண்டு ஆண்­டு­க­ளாக கிருமி பர­வ­லைத் திறம்­பட கையாண்டு வந்த ஆஸ்­தி­ரே­லியா, முதன்­முறை­யாகத் தேசிய சுகா­தார நெருக்­கடிக்கு உள்­ளாகி இருக்­கிறது.

சென்ற ஆண்டு டிசம்­பர் 1ஆம் தேதி நில­வ­ரப்­படி, ஆஸ்­தி­ரே­லியா­வில் ஒட்­டு­மொத்­த­மாக 213,000 பேரைக் கிருமி தொற்­றி­யிருந்­தது. தற்­போது அந்த எண்­ணிக்கை 1.2 மில்­லி­ய­னைக் கடந்­துவிட்டது.

மருத்­து­வ­ம­னை­களில் படுக்கை­கள் நிரம்­பத் தொடங்­கி­யுள்ளது, தடுப்­பூசி, பரி­சோ­த­னைக் கரு­வி­கள் கையி­ருப்பு இல்­லா­மல் போரா­டும் மருந்­த­கங்­கள், ஊழி­யர்­கள் தொற்­றுக்கு ஆளா­ன­தால் கடை­களில் காலி­யாக இருக்­கும் அல­மா­ரி­கள் எனப் பல­வி­தங்­க­ளி­லும் நெருக்கடி ஏற்­ப­ட்டுள்ளது.

இம்­மா­த பிற்­ப­கு­தி­யில் பள்­ளிக்­கூ­டங்­கள் திறக்­கப்­ப­ட­வுள்ளதால், அதற்கு முன்­ன­தாக பிள்­ளை­களுக்குத் தடுப்­பூசி போடப்­பட வேண்­டும் என்று விரும்­பும் பெற்­றோர்­க­ளால் மேலும் ஒரு நெருக்­கடி எழுந்­துள்­ளது.

ஐந்து வய­துக்கு மேற்­பட்ட பிள்ளை­க­ளுக்கு இந்த வாரம் முதல் தடுப்­பூசி போடு­வ­தற்­குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

இதற்­காக பல­ரும் ஏற்­கெ­னவே முன்­ப­திவு செய்­தி­ருந்­த­னர். ஆனால், தடுப்­பூசி பற்­றாக்­குறை கார­ண­மாக அவை தற்­போது ரத்து செய்­யப்­பட்டுள்ளன.

இதற்­கி­டையே பேசிய துணைத் தலைமை மருத்­துவ அதி­காரி மிக்கேல் கிட், 'பதற்­ற­ம­டைய வேண்­டாம்' என்­றும் இந்த மாத இறு­திக்­குள் அனைத்­துப் பிள்ளை­களுக்­கும் தடுப்­பூசி போடு­வ­தற்குத் தேவை­யான தடுப்­பூ­சி­கள் கையிருப்பு உள்­ள­தா­க­வும் சொன்­னார்.

அதி­க­ரித்து வரும் பரி­சோ­தனை தேவையை அர­சாங்­கத்­தால் சமா­ளிக்க முடி­யா­ததே மிகப்­பெரிய தோல்­வி­யாகப் பார்க்­கப்­ப­டு­கிறது. சில இடங்­களில் பரி­சோ­தனைக்­காக மக்­கள் 6 மணி நேரம் வரை காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருந்­தது.