தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலவெடியைக் கண்டுபிடிக்கும் 'ஹீரோ' எலி மரணம்

1 mins read
9d37929c-b346-4e7e-9457-cf9c22b6e815
கம்போடியாவில் 100 நிலவெடிகளைக் கண்டுபிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றிய மகாவா எலிக்கு 2020ல் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

நோம் பென்: கம்­போ­டி­யா­வில் 100 கண்­ணி­வெ­டி­க­ளைக் கண்­டு­பிடிக்கும் அபார மோப்ப சக்தி பெற்ற மகாவா எலி உயி­ரி­ழந்தது.

கம்­போ­டி­யா­வில் நில­வெடிகளைக் கண்­ட­றி­வ­தில் திறம்­பட செயல்­பட்டு வந்த 8 வய­தான மகாவா சென்ற ஆண்டு ஓய்வு பெற்­றது.

கடந்த சில நாட்­க­ளாக உடல்­ந­லக் குறை­வால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த மகாவா உயி­ரி­ழந்­தது.

மகாவா எலி ஆஃப்­ரிக்­கா­வின் டான்­சா­னியா நாட்­டில் பிறந்து, வளர்ந்­தது. அங்­கி­ருந்து கம்­போ­டி­யா­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு கண்­ணி­வெ­டி­க­ளைக் கண்­டு­பி­டிக்­கும் பணிக்­கா­கவே பிரத்தி­யே­க­மாக பயிற்­சிக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.

கம்­போ­டி­யா­வில் 1998ல் முடி­வடைந்த முப்­ப­தாண்டு கால உள்­நாட்­டுப் போரின்­போது மில்­லி­யன் கணக்­கான நில­வெ­டி­கள் புதைக்கப்­பட்­டன. இவற்றில் சிக்கி கிட்டத்தட்ட 60 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் இறந்­த­தால் அவற்றை அகற்­று­வதற்கு முடிவு செய்த அந்­நாட்டு அரசு, மகாவா எலியை அப்­ப­ணி­யில் ஈடு­ப­டுத்­தி­யது.

இதன் மிகச் சிறப்­பான பணியை அங்­கீ­க­ரிக்­கும் வித­மாக பிரிட்­ட­னின் விலங்­கு­கள் நல அமைப்பு, 2020ஆம் ஆண்­டில் மகா­வா­வுக்கு தங்­கப்­ப­தக்­கம் வழங்கி கௌர­வப்­ப­டுத்­தி­யது.

அந்த அமைப்­பின் 77 ஆண்­டுக் ­கால வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக எலி ஒன்று தங்­கப்­ப­தக்­கம் பெற்றது.