பொதுவிருது போட்டிக்கான குலுக்கலில் ஜோக்கோவிச் பெயர்

பொதுவிருது போட்டிக்கான குலுக்கலில் ஜோக்கோவிச் பெயர்

1 mins read
f7938d23-9f8d-48f1-8276-2012ec1654e4
-

மெல்­பர்ன்: டென்­னிஸ் வீரர் நோவாக் ஜோக்­கோ­விச்­சின் ஆஸ்­தி­ரே­லிய விசா குறித்து நிச்­ச­ய­மற்ற நிலை நில­வும் வேளை­யில், ஆஸ்­தி­ரே­லிய பொது­வி­ருது போட்டிக்­கான அதி­கா­ர­பூர்வ குலுக்­க­லில் அவரின் பெயர் இடம் பெற்­றுள்­ளது.

குலுக்­க­லின்­படி, திங்­கள் அல்­லது செவ்­வா­ய்க்கிழமையன்று நடை­பெ­ற­வுள்ள தொடக்க ஆட்­டத்­தில், ஜோக்­கோ­விச்­சிற்கு எதி­ராக இன்­னோர் செர்­பிய வீரரான மியோமிர் கெக்மனோவிச் தேர்­வா­கி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, தனது 21வது பொது­வி­ருதை வெல்­லும் முனைப்­பு­டன் உள்ள ஜோக்­கோ­விச், ஆஸ்திரேலியாவின் நேற்று பயிற்­சி­யைத் தொடங்­கி­னார்.

ஆண்­கள் பிரி­வில் இது­வரை யாரும் 21 பொது­வி­ருதை வென்­ற­தில்லை.

இந்நிலையில், ஜோக்­கோ­விச்­சின் விசா நிலை­யைப் பற்­றிக் கருத்­துத் தெரி­விக்க மறுத்­து­விட்ட ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன், அது­பற்­றிக் குடி­நு­ழைவு அமைச்­சர் முடி­வெடுப்­பார் என்று சொன்­னார்.