மலேசியா: இந்து கடவுள்களின் உருவம் கொண்ட பொருள்களுக்குத் தடை கோரும் சங்கம்

மலேசியா: இந்து கடவுள்களின் உருவம் கொண்ட பொருள்களுக்குத் தடை கோரும் சங்கம்

1 mins read
7e024b83-3667-4226-b0c0-eac8e0bdcf7d
-

கோலா­லம்­பூர்: அடுத்த வாரம் தைப்­பூ­சத் திரு­விழா வரும் நிலை­யில், இந்­துக் கட­வுள்­க­ளின் உரு­வங்­க­ளைக் கொண்ட டீ சட்­டை­கள், பூசைப் பொருட்­கள் ஆகி­ய­வற்­றின் விற்­ப­னைக்குத் தடை விதிக்­கும்­படி பினாங்கு இந்து சங்­கம் மலே­சிய அர­சாங்­கத்­தைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

விநா­ய­கர், சிவன், கிருஷ்­ணன், அம்­மன் ஆகிய கட­வுள் உரு­வப் படங்­கள் பூசைப் பொருட்­க­ளின் அட்­டை­க­ளி­லும் டீ சட்­டை­க­ளி­லும் பதிக்­கப்­பட்டு விற்­கப்­ப­டு­வ­தாக பினாங்கு இந்து சங்­கத் தலை­வர் பி. முரு­கையா கூறி­னார்.

குறிப்­பாக, பினாங்கு, கெடா உள்­ளிட்ட மாநி­லங்­களில் உள்ள சில கடை­கள் இவை விற்­ப­தாக திரு முரு­கையா சொன்­னார்.

பூசை பொருட்­க­ளைப் பயன்­ப­டுத்­திய பின்­னர், அவற்­றின் அட்­டை­க­ளைக் குப்­பைத்­தொட்­டி­யில் வீச வேண்­டி­வ­ரும். இது இந்­துக்­க­ளின் உணர்­வு­க­ளைக் காயப்­ப­டுத்­தக் கூடும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தைப்­பூ­சத்­தின் போதும் மற்ற இந்து திரு­விழா காலங்­க­ளின்­போ­தும் விற்­ப­னையை அதி­க­ரிப்­ப­தற்­காக, இந்து கட­வுள் உரு­வப்­ப­டங்­கள் உள்ள இத்­த­கைய பொருள்­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அவர் கருத்­து­ரைத்­தார்.

இத்­த­கைய பொருள்­களை வாங்க வேண்­டாம் என்று திரு முரு­கையா இந்­துக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.