ஊழியர் பற்றாக்குறை: தனிமைப்படுத்தலில் தளர்வுகளை அறிவித்துள்ள நாடுகள்

ஊழியர் பற்றாக்குறை: தனிமைப்படுத்தலில் தளர்வுகளை அறிவித்துள்ள நாடுகள்

1 mins read
fa2260bb-a738-4bbe-bb79-152484dd59a5
தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்த்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் அன்றாட கிருமித்தொற்று பரிசோதனையில் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யவேண்டும் என்று ஜப்பான் கூறியுள்ளது. படம்: ஏஎஃப்பி -

சிட்னி: கிரு­மிப் பர­வ­லைக் கட்டுப்­படுத்­தும் வித­மாக பல நாடு­கள் தனி­மைப்­ப­டுத்­தல் விதி­க­ளைப் பின்­பற்றி வரு­கின்­றன.

ஆனால், தனி­மைப்­ப­டுத்­தல் உத்­த­ர­வால் மருத்­து­வத் துறை மட்­டு­மல்­லா­மல், வேறு பல துறை­களிலும் ஊழி­யர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது.

இத­னைச் சமா­ளிக்­கும் வித­மாக, ஆஸ்­தி­ரே­லி­யா­வும் ஜப்­பா­னும் தனி­மைப்­ப­டுத்­தல் உத்­த­ர­வில் தளர்­வு­களை அறி­வித்­துள்­ளன.

நாளுக்கு நாள் கிரு­மித் தொற்றி ­ய­வர்­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­கொண்டே இருக்கும் ஆஸ்திரேலியாவில், ஊழியர் பற்றாக்குறை காரணமாக பொருள் விநி­யோ­கத்­தில் நெருக்­கடி ஏற்­பட்டுள்­ளது. கடை­களில் அல­மா­ரி­கள் காலி­யாக இருக்­கின்­றன.

எனவே, கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளோடு நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­க­ளுக்­கான தனி­மைப்­ப­டுத்­தல் உத்­த­ரவை ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநில அர­சாங்­கம் ரத்து செய்­துள்­ளது.

கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இல்­லை­யென்­றால், அவ­சர சேவை பிரிவு, கல்வி, போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­கள் உடனே வேலைக்­குத் திரும்­ப­லாம் என்று கூறப்­பட்­டுள்­ளது.

ஜப்­பா­னில் மருத்­துவ ஊழி­யர்­கள் பலர் 14 நாள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். அது மருத்­துவ அமைப்­பின் மீது நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­ய­தால், தற்­போது அந்த உத்­த­ரவு திரும்­பப் பெறப்­பட்­டுள்­ளது. அன்­றாட கிருமித்தொற்று பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என்­பது உறுதி செய்­யப்­பட்­டால் போதும் என்று அதன் சுகாதார அமைச்சர் சொன்னார்.