ஐந்து இடங்களுக்கு விமானச் சேவைகளைத் தொடரும் எமிரேட்ஸ்

துபாயைச் சேர்ந்த விமான நிறுவனமான எமிரேட்ஸ், ஐந்து இடங்களுக்கு விமானச் சேவைகளை தான் தொடர்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனது இணையப் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 13ஆம் தேதிமுதல், கினி, ஐவரி கோஸ்ட், கானா, உகாண்டா, அங்கோலா ஆகிய நாடுகளுக்கு விமானச் சேவைகளை எமிரேட்ஸ் தொடர்கிறது,” என்று குறிப்பிட்டது.

கொவிட்-19 சூழல் தொடர்ந்து மாறி வருவதால், துபாய் செல்வதற்கான பயண விதிமுறைகளைப் படித்து தெரிந்துகொள்ளும்படி பயணிகளுக்கு எமிரேட்ஸ் அறிவுறுத்தியது.

முன்னதாக, 12 இடங்களில் இருந்து துபாய் வருவதற்கான விமானச் சேவைகளை எமிரேட்ஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அந்த 12 இடங்களும் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!