தென் பசிபிக் கடலில் உள்ள டோங்கா, அமெரிக்க சமோவோ தீவுகளில் சுனாமி அலை ஏற்பட்டுள்ளது.
டோங்கா அருகே கடலடி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து சுனாமி அலை உருவானது.
நுக்கு'அலோஃபா எனப்படம் டோங்கா தலைநகருக்கு 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலடி எரிமலை வெடித்தது.
சிங்கப்பூர் நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு எரிமலை வெடித்ததாக அமெரிக்க வானிலை ஆய்வுத் துறை கூறியது.
அது சுமார் 1.2 மீட்டர் உயரமுள்ள பேரலைகளை உருவாக்கியது.
டோங்கா தலைநகரின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
அந்தத் தீவுகளில் உள்ள வீடுகளில் இரண்டு, மூன்று அடி உயரமுள்ள அலைகள் புகுந்ததை சமூக ஊடங்களில் பதிவிடப்பட்ட காணொளிகள் காட்டின.
கார்களையும் வீடுகளையும் விட்டு மேடான இடங்களை நோக்கி மக்கள் ஓடியதையும் அந்தக் காணொளிகள் காட்டின.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து நியூ சீலாந்து, ஃபிஜி ஆகியவை சுனாமி எச்சரிக்கையை விடுத்தன.

