ரயிலிலிருந்து ஏவுகணை

ரயிலிலிருந்து ஏவுகணை

2 mins read
d11a25f7-64af-43fd-9ad7-9bbb97c9779a
வடகொரியா ரயிலிலிருந்து ஏவுகணைச் சோதனை நடத்தியதாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த ஏவுகணைச் சோதனை வட பியோங்கான் மாநிலத்தில் நடத்தப்பட்டது.படம்: இபிஏ -

சோல்: வட­கொ­ரியா ரயி­லி­லி­ருந்து ஏவு­க­ணை­யைப் பாய்ச்சி சோதனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்­கத்­தின் கேசி­என்ஏ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. ஆகக் கடைசி நில­வ­ரப்­படி வட­கொரியா இம்­மா­தம் மூன்று ஏவு­கணை சோத­னை­களை நடத்­தி­யுள்­ளது.

வட­கொ­ரி­யா­வின் நட­வ­டிக்­கை­கள், அந்நாட்டிற்கு எதி­ரா­கக் கூடு­தல் தடை உத்­த­ர­வு­களை விதிக்க அமெ­ரிக்­கா­வைத் தூண்­டி­ன. குறைந்த தூரம் செல்­லும் இரண்டு 'எஸ்­பி­ஆர்­எம்' ஏவு­க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­டன.

இந்த ஏவு­கணை­கள் சுமார் 430 கிலோ­மீட்­டர் தூரம் சென்­றன. இவை எட்­டிய உய­ரம், 36 கிலோ­மீட்­டர் என்று தென்­கொ­ரி­யா­வின் கூட்­டுப் படை­களின் தலைமைத் தள­ப­தி­கள் தெரி­வித்­த­னர். ஏவு­க­ணை­கள் எவ்­வ­ளவு தூரம் சென்­றன, எட்­டிய உய­ரம் குறித்து கேசி­என்ஏ தக­வல்­ ஏதும் வெளி­யி­ட­வில்லை. ரயி­லி­லி­ருந்து பாய்ச்­சப்­படும் ஏவு­க­ணை­யின் ஆற்­றலைச் சோதித்­துப் பார்க்க வட பியோங்­கான் மாநி­லத்­தில் சோதனை நடத்­தப்­பட்­ட­தாக மட்­டும் அது கூறியது.

சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாதம் வட­கொ­ரியா முதன்­மு­றை­யாக ரயி­லி­லி­ருந்து பாய்ச்­சப்­படும் ஏவு­க­ணைகளைச் சோதித்­தது. தனக்கு மிரட்­டல் விடுக்­கக்­கூ­டி­யோ­ருக்­குப் பதி­லடி கொடுக்க இத்­த­கைய ஏவு­கணையை உரு­வாக்­கியதாக அது சொன்­னது.

புத்­தாண்டு பிறந்­த­தி­லி­ருந்து வட­கொ­ரியா என்­றும் இல்­லாத வகை­யில் மிக வேக­மாக மூன்று ஏவு­கணை சோத­னை­களை நடத்தி­யுள்­ளது. ரயில் ஏவு­க­ணை­யைச் சோதிப்­ப­தற்கு முன் இவ்­வாண்டு அதி­வே­க­மாக வளைந்து நெளிந்து போகக்­கூ­டிய 2 'ஹைப்­பர்­சா­னிக்' ஏவு­க­ணை­களை வட­கொ­ரியா சோத­னை­யிட்­டது.

வட­கொ­ரி­யத் தலை­வர் கிம் ஜோங் உன் இந்த ஏவு­கணைச் சோத­னையை நேரில் சென்று பார்­வை­யி­ட­வில்லை.

ரயில் ஏவு­க­ணை­களை உரு­வாக்க செலவு குறைவு. பாய்ச்­சு­வதற்கு முன் அவற்றை அடை­யா­ளம் காண்­ப­தும் கடி­னம்.