செமாராங்: தனது 'செல்ஃபி'களின் காப்புரிமை தொடர்பிலான வர்த்தகத்தின் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையைச் சம்பாதித்துள்ளார் இந்தோனீசிய இளையர் சுல்தான் குஸ்தாவ் கொஸாலி கொஸாலு. 'என்எஃப்டி' எனும் மின்னிலக்க நாணயம் தொடர்பிலான தளத்தில் இவரின் படங்களுக்கான உரிமைகள் விற்கப்பட்டன.
22 வயது திரு கொஸாலி கொஸாலு (படம்), மின்னிலக்க நாணயத்துக்கான புளோக்செயின் முறையைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு 'ஓப்பன்சீ' எனும் 'என்எஃப்டி' வர்த்தகத் தளத்திற்குத் தனது படங்களைப் பதிவேற்றம் செய்து யோகக்காரரானார்.

