கொவிட்-19: மீண்டும் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்

கொவிட்-19: மீண்டும் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்

1 mins read
4608ce3a-6b3c-4adc-b941-6c9ea38cc016
-

மாராங் (மலே­சியா): போலி கொவிட்-19 தடுப்­பூசி சான்­றி­தழ்­களை வழங்­கி­ய­தாக சந்­தே­கி­க்கப்­படும் மலே­சிய மருத்­து­வர் மீண்­டும் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார். அதி­கா­ரி­கள் ஏற்­கெ­னவே அவ­ரைத் தடுத்து வைத்­தி­ருந்­த­னர்.

திரங்கானு மாநிலத்தின் மாராங் வட்­டா­ரத்­தில் தனி­யார் மருந்­த­கம் ஒன்றை நடத்தி வந்த அந்த மருத்­து­வர், போலி கொவிட்-19 தடுப்­பூசி சான்­றி­தழ்­களை வழங்­கி­ய­தற்­குக் கட்­ட­ணம் பெற்­ற­ார் என்று சந்­தே­கிக்­கப்­படு­வ­தாக திரங்­கானு மாநி­லத்­தின் வர்த்­த­கக் குற்ற விசா­ரணைப் பிரிவு பெர்­னாமா செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­தது. தடுப்­பூசி­க­ளைப் போட­ாமலேயே அவர் சான்­றி­தழ்­களைத் தந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இறு­தி­யில் அவர் தன்னை நாடி வந்­தோ­ரி­டம் போலிச் சான்­றி­தழ்­களைக் கொடுக்­க­வில்லை. அவ­ருக்கு எதி­ராக சிலர் புகார் கொடுத்­த­னர்.