நுக்கு'அலோஃபா (தோங்கா): தோங்கா நாட்டிற்கு அருகே கடலடியில் இருந்த எரிமலை குமுறியதால் சுனாமி அலைகள் எழுந்தன. பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆஸ்திரேயாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
தோங்காவின் தலைநகர் நுக்கு'அலோஃபா, அமெரிக்கன் சமோவா தலைநகர் பாகோ பாகோ ஆகியவற்றில் சுனாமி அலைகள் எழுந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பாதுகாப்பிற்காக அவசரமாக ஓடுவதை டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட சில காணொளிகள் காண்பித்தன.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று மதியம் 12.10 மணிக்கு எரிமலை குமுறியது.

