லண்டன்: இரவு நேரத்தில் கத்தாரிலிருந்து உகாண்டாவிற்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் கனடாவைச் சேர்ந்த ஆயிஷா கத்தீப் (படம்) என்ற மருத்துவர் ஒருவருக்குக் குழந்தையைப் பெற்றெடுக்க உதவியிருக்கிறார். இச்சம்பவம் சென்ற மாதம் ஐந்தாம் தேதியன்று நிகழ்ந்தது.
மருத்துவ உதவி தேவை என்று இவர் இருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது தெரியவந்தது. தயக்கமின்றி இவர் அந்த பெண்ணுக்குக் குழந்தையைப் பெற்றெடுக்க உதவினார்.
இதர இரண்டு பயணிகளும் இவருக்குக் கைகொடுத்தனர்.

