டெக்சாஸ் பிணைக்கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

டெக்சாஸ் பிணைக்கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

1 mins read
3562fb65-9b12-4efe-a5c4-e11b97994b60
மீட்புப் படையினரின் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த நால்வர் மீட்கப்பட்டனர். படம்: ‌ஏஎஃப்பி -

டல்­லாஸ்: அமெ­ரிக்­கா­வின் டெக்­சாஸ் மாநிலத்தில் உள்ள யூத ஆல­யத்­தில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்­கப்­பட்­டி­ருந்த நால்வர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பிரார்த்தனையில் கலந்­து­கொண்­ட­வர்­களைப் பிணைக்கைதி­க­ளாக்கி வைத்திருந்தவர் தன்னிடம் ஆயுதங்களும் வெடிபொருள்களும் இருப்பதாகச் சொன்னார்.

கிட்டத்தட்ட 10 மணி நேரத்­திற்­கும் மேலாக நீடித்த பதற்றம் முடிவுக்கு வந்ததாகவும் அப்போது சந்தேக நபர் மாண்டுவிட்டதாகவும் போலிசார் கூறினர்.

கிட்டத்தட்ட போலிஸ், உளவுத்துறையினர் உட்பட 200 பேர் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அவருடைய அடையாளம் பற்றியும் எப்படி மாண்டார் என்பது பற்றியும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

டெக்சாஸில் சிறையில் 86 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தானின் நரம்பியல் ஆராய்ச்சியாளரை, அவர் விடுவிக்கக் கோரியதாகக் கூறப்படுகிறது.