ஓமிக்ரான் கிருமிக்கு தாய்லாந்தில் முதல் மரணம்

ஓமிக்ரான் கிருமிக்கு தாய்லாந்தில் முதல் மரணம்

1 mins read
fc874fbb-afce-46df-a71a-a1acaa27c31f
-

பேங்காக்: தாய்லந்தில் ஓமிக்ரான் உருமாறிய கிருமிக்கு முதல் மரணம் பதிவானது.

சோங்க்லா மாநிலத்தைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி ஓமிக்ரான் கிருமியால் உயிரிழந்தார். அவர் படுத்தபடுக்கையாய் இருந்தவர் என்றும் அவருக்கு மறதிநோய் இருந்ததாகவும் தாய்லாந்து சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தாய்லந்தில் முதல் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவம் சென்ற மாதம் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அங்கு இதுவரை 10,000க்கும் அதிகமானோர் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 62 விழுக்காட்டினரே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.