அமெரிக்காவில் சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட அமேசான், ஃபெட் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. லாஸ் ஏஞ்சல்ஸில் சரக்குகளை வேறு வாகனத்திற்கு மாற்றுவதற்காக ரயில்கள் நிற்கும்போது திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டினர். அதன் பிறகு விலையுயர்ந்த பொருள்களை அவர்கள் திருடிச் சென்றுவிட்டனர். பயன்படுத்தப்படாத கொவிட்-19 பரிசோதனைக் கருவிகள், மீன்பிடித் தூண்டில்கள், அட்டைபெட்டிகள் உள்ளிட்டவை ரயில் தண்டவாளத்தில் சிதறி கிடந்தன. இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர். படம்: இபிஏ
சரக்கு ரயிலில் கொள்ளையர்கள் கைவரிசை
1 mins read
-

