மியன்மாரிலிருந்து ஏராளமானோர் வெளியேறுகின்றனர்

1 mins read
aa31e2e9-2d5f-485f-9829-9849904a9610
ராணுவத்திற்கும் போராளிக் குழுவிற்கும் இடையிலான சண்டையிலிருந்து தப்பி, ஆற்றைக் கடந்து தாய்லாந்தில் நுழைய முயலும் மியன்மார் மக்கள். படம்: ஏஎஃப்பி -

யங்­கூன்: மியன்­மா­ரின் முக்­கிய நக­ரத்திலிருந்து பல புத்த பிக்­கு­கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வெளி­யே­றி­ய­தாகத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

மியன்­மா­ரில் சென்ற ஆண்டு நடந்த ஆட்­சிக்­க­விழ்ப்­புக்கு எதி­ராக ராணு­வம், போரா­ளிக் குழுக்­களுக்கு இடையே ஏற்­பட்ட கடு­மை­யான சண்­டை­யால் தங்­கள் வசிப்­பி­டங்­க­ளை­விட்டு ஆயி­ரக்­கணக்கான மக்கள் வெளி­யே­றி­னர்.

கடந்த வாரம் கிழக்கு மியன்­மா­ரின் கயா மாநி­லத்­தில் உள்ள லோய்­காவ் நக­ரத்­தில் கடு­மை­யான சண்­டை நடந்­தது.

அத­னைத் தொடர்ந்து புத்த பிக்­கு­கள் உட்­பட அந்­ந­க­ரில் வசித்த பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் அங்­கி­ருந்து வெளி­யே­றி­விட்­ட­தாக ஐநா கூறி­யது.

"நாங்­கள் இங்கு தங்­கு­வது சாத்­தி­ய­மற்­றது," என்­றார் புத்த பிக்கு ஒரு­வர். தன்­னு­டன் மேலும் 30 பிக்­கு­கள் வெளி­யே­று­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

கோயில்­கள் பாது­காப்­பான புக­லி­டங்­க­ளா­கக் கரு­தப்­படும் ஒரு நாட்­டில் பிக்­கு­கள் வெளி­யே­றுவது அசாதாரணமானதாக பார்க்கப்படுகிறது.