தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள வாட் ஃபோ கோவிலில் பக்தர்களும் புத்த பிக்குகளும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சமயச் சடங்கு ஒன்றில் கலந்துகொண்டனர். அங்கு ஓமிக்ரான் கிருமிப் பரவல் சம்பவங்கள் குறையத் தொடங்கியுள்ளதால், வெளிநாட்டிலிருந்து செல்லும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் இல்லாத பயணத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக நாட்டின் துணைப் பிரதமரும் பொது சுகாதார அமைச்சருமான அனுடின் சார்ன்விரகுல் சொன்னார். இருப்பினும், மதுக்கூடங்கள், கேளிக்கைவிடுதிகள் போன்ற இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் சொன்னார். படம்: இபிஏ
தனிமைப்படுத்தல் இல்லா பயணத்திற்கு தாய்லாந்து மீண்டும் திட்டம்
1 mins read
-

