கிருமிப் பரவல் சூழலில் வறுமையில் வாடுவோர் அதிகரிப்பு உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரட்டிப்பு

கிருமிப் பரவல் சூழலில் வறுமையில் வாடுவோர் அதிகரிப்பு உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரட்டிப்பு

2 mins read
b8994582-7c28-4154-8b54-a8635a0eb2e0
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள டெஸ்லாவின் எலன் மஸ்க், அமேசானின் ஜெஃப் பெசோஸ். படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

பாரிஸ்: கிரு­மிப் பர­வல் ‌சூழ­லில் கடந்த இரண்டு ஆண்­டு­களில் பல நாடு­கள் வறுமை நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்ள நிலை­யில், உல­கின் முதல் 10 பணக்­கா­ரர்­க­ளின் சொத்து மதிப்பு இரு­ம­டங்கு உயர்ந்­துள்­ள­தாக அறிக்கை ஒன்று கூறு­கிறது.

வறுமை ஒழிப்பை நோக்­க­மா­கக் கொண்டு இயங்­கும் ஆக்ஸ்ஃ­பாம் எனும் அனைத்­து­லக அமைப்பு வெளி­யிட்­டுள்ள ஆய்­வில், உல­கின் முதல் 10 செல்­வந்­தர்­க­ளின் சொத்து மதிப்பு 700 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ரில் (945 பில்­லி­யன் சிங்­கப்­பூர் வெள்ளி) இருந்து 1.5 டிரில்­லி­யன் டால­ராக உயர்ந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

அதா­வது நாளொன்­றுக்கு அவர்­கள் சரா­ச­ரி­யாக 1.3 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் ஈட்­டி­யுள்­ள­தாக அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடந்த 14 ஆண்­டு­க­ளைக்­காட்­டி­லும் கிரு­மிப் பர­வல் காலத்­தில் அவர்­க­ளின் சொத்து மதிப்பு அதி­க­மாக உயர்ந்­துள்­ள­தாக அமைப்பு சொன்னது.

இதற்­கி­டையே, கிரு­மித்­தொற்று 160 மில்­லி­யன் மக்­களை வறு­மை­யில் தள்­ளி­யுள்­ள­தா­க­வும் அது சொன்­னது.

அதே நேரத்­தில் கொரோனா காலத்­தில் போது­மான சுகா­தார வச­தி­கள் இல்­லா­ம­லும் பசி, பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாகவும் ஒவ்­வொரு நாளும் 21 ஆயி­ரம் பேர் உயி­ரி­ழப்­ப­தா­க­வும் கூறி­யுள்­ளது.

இதற்கிடையே, இந்தியாவில் உள்ள முதல் 10 இடங்களில் உள்ள பணக்காரர்களின் சொத்து, அந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பள்ளிக் கல்வி, உயர்கல்விச் செலவுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்குப் போதுமானது என்றும் ஆக்ஸ்ஃபாம் இந்தியா தெரிவித்துள்ளது.

கொள்ளைநோய் காலத்தில் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 39 விழுக்காடு அதிகரித்து, 142 பணக்காரர்கள் உள்ளதாகவும் அறிக்கை கூறியது. அவர்களில் பலரின் சொத்து மதிப்பு இருமடங்காகியுள்ளதாகவும் அது சொன்னது.