தைப்பூச நாளில் அற்புதம்: பத்துமலை கோவிலுக்கு வெளியே குழந்தை பெற்றெடுத்த பெண்

தைப்பூச நாளில் அற்புதம்: பத்துமலை கோவிலுக்கு வெளியே குழந்தை பெற்றெடுத்த பெண்

1 mins read
05157e4a-0d6d-466f-b0b3-354bff4378bf
உடனடியாக செயல்பட்ட பக்தர்கள் பெண்ணின் பிரசவத்திற்கு உதவினர். படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பத்­து­மலை: தைப்­பூ­சத் திரு­நா­ளில் பத்­து­மலை கோவிலுக்கு வெளியே பெண் ஒருவர் காரி­லேயே குழந்தை பெற்­றெ­டுத்­தார்.

பிர­ச­வத்­திற்­காக மருத்­து­வ­மனைக்­குச் சென்று கொண்­டி­ருந்த போது, மலேசியாவில் உள்ள பத்து­மலை கோயி­லுக்கு அருகே அவ­ரது கண­வர் காரை நிறுத்­தி­னார்.

பெண்­ணின் அழுகை சத்­தம் கேட்டு தைப்­பூச நேர்த்­திக்­க­ட­னைச் செலுத்­து­வ­தற்­காக கோயி­லுக்­குச் சென்று கொண்­டி­ருந்த பக்­தர்­கள் உத­விக்­குச் சென்­ற­னர். அப்­போது அப்­பெண் பிர­ச­விக்க இருப்­பதை உணர்ந்து அவர்­கள் உட­ன­டி­யாக செயல்­பட்­ட­னர்.

துணை மருத்­து­வக் குழுவினர் வரு­வ­தற்­குள் அவர், பெண் குழந்­தையை ஈன்­றெ­டுத்­தார்.

பிறகு மருத்­து­வக் குழுவினர், அத்­தம்­ப­தியை குழந்­தை­யு­டன் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர்.

தைப்பூசத் திருநாளில் நிகழ்ந்த இச்சம்பவம், "படத்­தில் பார்ப்­ப­தைப் போன்று இருந்­தது," என்­றார் அங்­கி­ருந்த ஒரு­வர்.