மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் சென்ற வாரம் முதல் பற்றி எரியும் குப்பை கிடங்கின் தீயை அணைக்க அதிகாரிகள் போராடி வருகின்றனர். கரும்புகையின் வாடை பரவத் தொடங்கியதால், அப்பகுதியைச் சுற்றியுள்ள
10 பள்ளிக்கூடங்களுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புலாவ் புருங் குப்பைக் கிடங்குக்கு அருகில் வசிக்கும் சுமார் 400 பேர் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
படம்: ஏஎஃப்பி

