பெய்ஜிங் கிருமிப் பரவலுக்கு கனடாவே காரணம்: சீனா சாடல்

பெய்ஜிங் கிருமிப் பரவலுக்கு கனடாவே காரணம்: சீனா சாடல்

1 mins read
35000017-4f9c-4412-99f0-d556c998ed0d
-

பெய்­ஜிங்: பெய்­ஜிங்­கில் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள உள்­ளூர் ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று சம்­ப­வத்­திற்கு கன­டா­வில் இருந்து வந்த பொட்­ட­லமே கார­ணம் என்று சீன சுகா­தார அதி­கா­ரி­கள் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.

வெளி­நாடு எங்­கும் செல்­லாத அந்­ந­பர், அலு­வ­ல­கத்­தில் வெளி­நாட்­டில் இருந்து வரும் பொட்­ட­லங்­க­ளைக் கையாண்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கடந்த ஜன­வரி 11ஆம் தேதி கன­டா­வில் இருந்து ஹாங்­காங், அமெ­ரிக்கா வழி­யாக பெய்­ஜிங் சென்­ற­டைந்த பொட்­ட­லத்­தின் மேற்­ப­கு­தி­யி­லும் அத­னுள் இருந்த சில ஆவ­ணங்­க­ளி­லும் கிரு­மித்­தொற்று இருந்­த­தாக பரி­சோ­த­னை­யில் உறு­தி­யா­னது.

இதை­ய­டுத்து, வெளி­நாட்­டில் இருந்து வரு­ப­வற்­றைப் பிரிக்­கும்­போது கையுறை, முகக்­க­வ­சம் அணிந்­து­கொள்­ளு­மா­றும் வெளி­நாட்­டில் இருந்து வாங்­கு­வ­தைத் தவிர்க்­கு­மா­றும் பெய்­ஜிங் மக்­களை அதி­கா­ரி­கள் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.