உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கும் பிரிட்டன்

உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கும் பிரிட்டன்

1 mins read
26fbebfb-371d-490e-ac0d-9ac9cbab86c1
-

லண்­டன்: ரஷ்­யா­வின் அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தற்­காப்­புக்­காக உக்­ரே­னுக்கு குறு­கிய தூரம் சென்று தாக்­கும் கவச வாகன எதிர்ப்பு ஏவு­க­ணை­களை பிரிட்டன் வழங்­க­வுள்­ளது.

ரஷ்யா தனது எல்­லை­யில் சுமார் 100,000 துருப்­புக்­க­ளைக் குவித்­ததை அடுத்து, பிரிட்­டி‌ஷ் பாது­காப்பு செய­லா­ளர் பென் வாலஸ் இந்த அறி­விப்பை வெளி­யிட்­டார்.

அத்­த­டன் சிறிய பிரிட்­டி‌ஷ் படை ஒன்­றும் உக்­ரே­னுக்கு அனுப்­பப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

உக்­ரேன் மீது ர‌ஷ்யா படையெடுக்கும் என்ற அச்­சம் உள்­ள­தாக மேற்­கத்­திய நாடு­கள் கூறின.

இதனை மறுத்து ர‌ஷ்யா, மேற்கத்திய நாடுகள் உக்ரேனை ஆக்கிரமிப்பதாகக் குற்றம் சாட்டியது.