ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 26 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 26 பேர் பலி

1 mins read
c733fb5c-c566-4040-8841-a9c7994d821e
-

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் மாண்டு விட்டனர்.

பத்கிஸ் மாநிலத்தின் கிழக்கே ரிக்டர் அளவுகோலில் 5.3 என நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையத்தின் தகவல் கூறியது.

இதனால் பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மக்கள் பயத்தில் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

அம்மாநிலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட குவாடிஸ் மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.