விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
0da6dee0-a1c8-45dc-a468-0a830c5bf2d3
-

ரியால் மட்ரிட் குழுவின் முன்னாள் வீரர் ஜென்டோ மரணம்

மட்ரிட்: ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரும் ஸ்பெயினின் ஐரோப்பிய வெற்றியாளருமான ஜென்டோ தனது 88வது வயதில் காலமானார். 1953ல் ரியால் மட்ரிட் குழுவில் இணைந்த அவர், 1971ஆம் ஆண்டு வரை அக்குழுவிற்காக விளையாடினார். 600 ஆட்டங்களில் விளையாடிய இவர்

182 கோல்கள் போட்டுள்ளார். ஆறு ஐரோப்பிய கிண்ணங்களையும் வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கும் இவர் சொந்தக்காரராவார்.

சிறந்த விளையாட்டாளர் விருதைத் தக்க வைத்த லெவன்டாவ்ஸ்கி

மட்ரிட்: பயர்ன் மியூனிக் காற்பந்துக் குழுவின் ராபர்ட் லெவன்டாவ்ஸ்கி ஃபிபாவின் சிறந்த விளையாட்டாளர் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். பார்சிலோனா காற்பந்துக் குழுவின் வீராங்கனையான அலெக்சா புடேல்ஸ் பெண்கள் பிரிவிற்கான சிறந்த விளையாட்டாளர் பட்டத்தை வென்றார்.

அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியையும் எகிப்தின் சாலாவையும் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது முறையாக விருதை வென்றுள்ளார் லெவன்டாவ்ஸ்கி.

இன்று இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி

கேப் டவுன்: தென்னாப்பிரிக்க, இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் இன்று தென்னாப்பிரிக்காவின் பார்ல் நகரில் நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 1-2 எனத் தோல்வியடைந்த இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யார் யார் களமிறங்குவார்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் 20 ஓவர், ஒருநாள் போட்டிக்கான அணித்தலைவருமான ரோகித் சர்மா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். எனவே, கே.எல்.ராகுலுடன் தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவான் களமிறக்கப்படலாம்.

தொடக்க வீரராக அதிக அனுபவமுள்ள தவான், விஜய் ஹசாரே தொடரில் தவான் பெரிதும் சோபிக்கவில்லை.

5 ஆட்டங்களில் ஆடியிருந்த அவர் 56 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், இதே தொடரில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 603 ஒட்டங்கள் குவித்திருந்தார்.

எனவே, இவர்களில் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.