கொழும்பிற்கு கூடுதலாக ஐந்து விமானச் சேவைகளை வழங்கும் எமிரேட்ஸ்

1 mins read
c071777c-85b4-4626-82f3-979a8d503f57
துபாய் அனைத்துலக விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எமிரேட்ஸ் விமானங்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

எமிரேட்ஸ் விமான நிறுவனம், இலங்கை தலைநகர் கொழும்பிற்கு வரும் பிப்ரவரி 10ஆம் தேதிமுதல் கூடுதலாக ஐந்து விமானச் சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் வாரந்தோறும் கொழும்பிற்கு 26 விமானச் சேவைகளை எமிரேட்ஸ் வழங்கும். மாலத்தீவுகள் தலைநகர் மாலேவுக்கும் கொழும்பிற்கும் இடையே தினசரி விமானச் சேவையும் அவற்றில் அடங்கும்.

எமிரேட்ஸ் வழங்கும் இந்தக் கூடுதல் விமானச் சேவைகள் ஒவ்வொரு செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறும்.

"எங்களுக்கு இலங்கை மிக முக்கியமான சந்தையாகும். அந்த வகையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுப்பயணத்துறையின் மீட்சிக்கு ஆதரவளிக்க முக்கிய பங்காற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 2021ல் கிட்டத்தட்ட 200,000 சுற்றுப்பயணிகளை இலங்கை ஈர்த்தது. டிசம்பர், ஜனவரியிலும் அங்கு சுற்றுப்பயணிகளின் வருகை நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது," என்றார் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான எமிரேட்ஸ் நிறுவனத்தின் வட்டார மேலாளர் சந்தனா டி சில்வா.

சரக்குகளை ஏற்றுமதி செய்யவும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்யவும் கூடுதல் இடவசதி வழங்க இந்தக் கூடுதல் விமானச் சேவைகள வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.