அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம், கொவிட்-19 அதிகரிப்பு காரணமாக 22 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல், ஆஸ்திரேலியா, எகிப்து, அல்பேனியா, அர்ஜெண்டினா, உருகுவே, கத்தார், பனாமா உள்ளிட்டவை அந்த நாடுகளில் அடங்கும்.
அந்த நாடுகளுக்கான பயண எச்சரிக்கையை நான்காம் நிலைக்கு அம்மையம் உயர்த்தியது.
தற்போது, 100க்கும் மேற்பட்ட நாடுகளும் பிரதேசங்களும் நான்காம் நிலையில் உள்ளன.

