உடல்நலமுள்ள சிறுவர்களுக்கும் இளையர்களுக்கும் பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசிகள் தேவை என்பதற்கு தற்போது எந்தச் சான்றும் இல்லை என்று உலக
சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் ஆய்வாளர் செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராக காலப்போக்கில் கொவிட்-19 தடுப்பூசிகளின் செயல்திறன் ஓரளவுக்குக் குறைவதாகத் தெரிகிறது.
ஆனால் யாருக்குக் கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படும் என்பதைக் கண்டறிய ஆய்வுகளை நடத்தவேண்டும் என்று செளமியா சொன்னார். இந்நிலையில் சில உலகநாடுகள் சிறுவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடத் தயாராகி வருகின்றன. இஸ்ரேல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போட்டுவருகிறது.

