பரிசோதனைக் கருவிகள் திருட்டு

பரிசோதனைக் கருவிகள் திருட்டு

1 mins read
66156149-7cb9-4971-be34-cf8729c8faf3
-

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கிடங்கு ஒன்றில் இருந்து 42,000 ஆன்டிஜென் விரைவு பரிசோதனை கருவிகளை ஒருவன் திருடிச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சென்ற செவ்வாய்கிழமையன்று மஸ்கோட்டின் புறநகர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஆன்டிஜென் பரிசோதனை கருவிகளுக்குக் கடும் கட்டுப்பாடு நிலவும் வேளையில் நடந்துள்ள இச்சம்பவத்தை மாநில முதல்வர் டோமினிக் பெர்ரோட் கடுமையாகக் கண்டித்துள்ளார். சில இடங்களில் ஓர் ஆன்டிஜென் பரிசோதனை கருவி 22 அமெரிக்க டாலருக்கு (30 சிங்கப்பூர் வெள்ளி) விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.