ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலித் தீவில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இந்தோனீசிய தீவிரவாதிக்கு ஜகார்த்தா நீதிமன்றம் 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தள்ளது.
2002ஆம் ஆண்டு பாலித் தீவில் நடந்த குண்டுவெடிப்பில் 202 பேர் மாண்டனர்.
அந்தக் குண்டுவெடிப்பு தொடர்பில் அல்கொய்தாவுடன் தொடர்பில் இருந்த தீவிரவாதி அரிஸ் சுமர்சோனோவின் பெயர் சந்தேக நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அதன் பிறகு கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த சுமர்சோனோவை, 2020ஆம் ஆண்டு டிசம்பரில் போலிசார் கைது செய்தனர்.
பாலி குண்டுவெடிப்பு மட்டுமல்லாமல், வேறு சில சதித் திட்டங்கள் தொடர்பாகவும் சுமர்சோனோ மீது சாட்டப்பட்ட குற்றங்கள் விசாரிக்கப்பட்டன.

