அதிநவீன வசதிகள், நீண்ட கடற்கரைகள், உயர்தர உணவகங்கள், சொகுசு ஹோட்டல்கள், இவை அனைத்தையும் சுற்றுப்பயணிகளுக்கு விருந்தாய் வழங்குகிறது துபாய்.
இந்நகரம் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களின் பட்டியலில், கடந்த சில ஆண்டுகளாகவே மெல்லமெல்ல உயர்ந்துவருகிறது.
கொவிட்-19 கிருமித்தொற்று சூழலிலும், ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் துபாய்க்கு திரளாக செல்கின்றனர்.
உற்சாகம் தேடி துபாய்ககு சுற்றுலா பயணம் போவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு நகரத்தில் எங்கு தங்கலாம், எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம், என்ன செய்யலாம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
அந்தப் பட்டியலை ஆண்டுதோறும் 'டிரிப்எட்வைசர்' (Tripadvisor) எனும் சுற்றுலா இணையத்தளம் வெளியிடுகிறது.
2022ஆம் ஆண்டின் ஆக புகழ்பெற்ற முதல் 10 நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் மற்ற நாடுகள்:
2. லண்டன், பிரிட்டன் 3. கான்குன், மெக்சிக்கோ 4. பாலி, இந்தோனீசியா 5. கிரேத், கிரீஸ் 6. ரோம், இத்தாலி 7. காபோ சான் லூக்கஸ், மெக்சிகோ 8. இஸ்தான்புல், துருக்கி 9. பாரிஸ், பிரான்ஸ் 10. ஹர்காடா, எகிப்து

