பூக்குழியில் இறங்கிய பெண் தீக்காயங்களால் மரணம்

பூக்குழியில் இறங்கிய பெண் தீக்காயங்களால் மரணம்

1 mins read
22b0a024-7c0c-4d8d-9210-4093b0aa144f
இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஆர்மர் ஸ்த்ரீட். அங்குள்ள ஆலயம் ஒன்றில் நடந்த தீமிதித் திருவிழாவில் தீக்காயம் ஏற்பட்டு மாது ஒருவர் உயிர் இழந்தார். படம்: இணையம் -

தீமிதித் திருவிழாவில் கலந்துகொண்ட இளம்பெண் தீக்காயங்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறத் தவறியதால் உயிரிழந்தார்.

கொழும்பில் உள்ள ஆர்மர் வீதியில் அமைந்திருக்கும் ஆலயம் ஒன்றில் அச்சம்பவம் நடந்தது.

ஆண்டுதோறும் அங்கு நடத்தப்படும் தீமிதித் திருவிழாவில் அந்த 26 வயது இளம்பெண்ணும் கலந்துகொண்டார்.

பூக்குழியில் இறங்கிய அவரது கால்களில் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் காயங்களுக்கு அந்தப் பெண் சிகிச்சை பெறவில்லை.

மறுநாள் வீட்டில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அவருக்கு 10 வயது மகள் இருக்கிறார் என்று இலங்கை ஊடகங்கள் கூறின.