குறைந்த விலை கொரோனா மாத்திரை

குறைந்த விலை கொரோனா மாத்திரை

1 mins read
0e2a1474-b185-42e4-991c-b33c6781e14f
105 வளர்ச்சி அடையாத நாடுகளுக்கு இந்த மாத்திரை விநியோகிக்கப்படவிருக்கின்றன. படம்: புளூம்பர்க் -

பிரஸ்­ஸல்ஸ்: கொவிட்-19க்கு எதி­ரான மாத்­தி­ரை­யைக் குறைந்த செல­வில் தயா­ரிக்க ஏறத்­தாழ 30 மருந்து தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் உடன்­பாடு ஒன்­றில் கையெ­ழுத்­திட்டு இருக்­கின்­றன.

ஐநா­வின் ஆத­ரவு பெற்ற 'எம்­பிபி' என்ற அமைப்பு இதனை தெரி­வித்­தது. 'மெர்க் அண்ட் கோ' நிறு­வ­னம் உரு­வாக்கி இருக்­கும் கொவிட்-19க்கு எதி­ரான மாத்­தி­ரை­யைக் குறைந்த செல­வில் தயா­ரிப்­பது அந்த உடன்­பாட்­டின் நோக்­கம். இந்­தியா, சீனா நாடு­க­ளை­யும் ஆப்­பி­ரிக்கா, ஆசியா, மத்­திய கிழக்கு நாடு­க­ளை­யும் சேர்ந்த 27 நிறு­வ­னங்­கள் அந்த மாத்­தி­ரை­யைத் தயா­ரிக்க உடன்­பாடு வழி­வ­குக்­கிறது. இப்­படி தயா­ரிக்­கப்­படும் மாத்­திரை, 105 ஏழை நாடு­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும் என்­றும் எம்­பிபி தெரி­வித்து உள்­ளது.

"கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான சிகிச்­சை­கள் அவ­ச­ர­மா­கத் தேவைப்­படுகின்­றன.

"அத்­த­கைய சிகிச்­சை­களை உலக நாடு­கள் பெறு­வதை உறு­திப் படுத்­தும் வகை­யில் இடம்­பெ­றக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­யாக இது இருக்­கிறது.

"குறைந்த செல­வில் மாத்­தி­ரை­யைத் தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­கள், பல்­வேறு நாடு­க­ளின் ஒழுங்­கு­முறை நிர்­வா­கங்­க­ளு­டன் அணுக்­க­மா­கச் செயல்­பட்டு வரு­கின்­றன.

"இத­னால் அந்த மாத்­தி­ரை­கள் மிக வேக­மாக கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது," என்று எம்­பிபி அமைப்­பின் நிர்­வாக இயக்­கு­நர் சார்ல்ஸ் கோர் தெரி­வித்­தார்.