ஒரு மில்லியன் தடுப்பூசிகள் பாழானது

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் மக்­க­ளுக்கு போடு­வ­தற்கு முன்பே காலா வதி­யா­ன­தால் குப்­பை­யில் வீசப்­பட்­டன.

குறு­கிய காலத்­திற்­குள் காலா­ வ­தி­யா­கும் அவற்றை சில நாடு­கள் இந்­தோ­னீ­சி­யா­வுக்கு நன்­கொ­டை­யாக வழங்­கி­யி­ருந்­தன.

மொத்­தம் 1.1 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் குப்­பை­யில் வீசப்­பட்­டன. அவற்­றில் 98 விழுக்­காடு தடுப்­ பூ­சி­கள் ஒரு மாதத்­தி­லி­ருந்து மூன்று மாதங்­களில் காலா­வ­தி­யா­கக் கூடி­யவை. சில நாடு­கள் அவற்றை நன்­கொ­டை­யாக வழங்­கி­யி­ருந்ததாக நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய இந்­தோ­னீ­சிய சுகா­தார அமைச்­சர் புடி குனாடி சடி­கின் தெரி­வித்­தார்.

பணக்­கார நாடு­கள் தேவைக்கு அதி­க­மாக தடுப்­பூ­சி­களை வாங்­கி­ய­தால் அவற்றை விரை­வாக விநி யோகிக்­கும் நாடு­க­ளுக்கு நன்­கொ­டை­யாக வழங்­கின.

கடந்த ஆண்டு இறு­தி­யில் நன் கொடையாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இந்­தோ­னீ­சியா வந்து சேர்ந்­தன. ஆனால் இம்­முறை நன்­கொ­டை­யாக வழங்­கப்­படும் தடுப்­பூ­சி­கள் கவ­ன­மாக ஏற்­றுக்கொள்­ளப்­படும் என்று அைமச்­சர் குறிப்­பிட்­டார்.

குைறந்­தது மூன்று மாதம் அல்­லது அதற்­கும் மேற்­பட்டு காலா­வதி­யா­கும் தடுப்­பூ­சி­களை மட்­டும் ஏற்­றுக்கொள்­வோம் என்று அவர் சொன்­னார்.

இந்­தோ­னீ­சி­யா­வுக்கு அதன் கூடு­தல்(பூஸ்­டர்) தடுப்­பூ­சித் திட்­டத்­திற்கு நூறு மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் தேவைப்­ப­டு­கின்­றன. தடுப்­பூ­சி­களை கோவேக்ஸ் திட்டம் மூலம் இந்­தோ­னீ­சியா பெற்று வரு­கிறது. எஞ்­சியவை இரு தரப்பு ஒப்­பந்­தம் மூலம் பெறப்­ப­டு­கின்­றன.

நைஜீ­ரியா, உகாண்டா போன்ற இதர சில நாடு­களும் குறு­கிய காலத்­தில் காலா­வ­தி­யான தடுப்­பூ­சி­களை குப்­பை­யில் வீசி­ உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!