'பயணக் கட்டுப்பாடுகளை நீக்க அல்லது தளர்த்த வேண்டும்'

'பயணக் கட்டுப்பாடுகளை நீக்க அல்லது தளர்த்த வேண்டும்'

1 mins read
a0643cd4-e3b4-4d62-b832-51026020c472
-

அனைத்துலகப் பயணக் கட்டுப் பாடுகளை நீக்கும்படி அல்லது தளர்த்தும்படி உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் ஆலோ சனை கூறியுள்ளது. உலக சுகா தார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு அதன் பரிந்துரைகளை தலைமை இயக்கு நரிடம் முன் வைத்தது. ஓமிக்ரான் பரவலால் பல நாடுகள் மீண்டும் பயணக் கட்டுப் பாடுகளைக் கடுமையாக்கி யுள்ள நிலையில் அனைத்துலகப் பயணங்கள் தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று அனைத்துலக அளவில் பெரும் கவலைக்குரிய ஒன்று என்று இன்னமும் கருதுவதாக நிறுவனம் கூறியது. இருந்தபோதும், பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஆலோசனையை அது விடுத்து உள்ளது. கொவிட்-19 தடுப்பூசிகள் உலக மக்களுக்குக் கிடைப்பதில் சமநிலை இல்லை. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சான்று அளித்தால் மட்டுமே வெளி நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும் என்பதை ஒரே நிபந்தனை யாக முன்வைக்க முடியாது என்று அமைப்பு கூறியது.

முன்னதாக, பரிந்துரைகளை முன்வைத்த அவசரநிலைக் குழு, பயணக் கட்டுப்பாடுகளால் கூடு தல் பயன் இல்லை என்று கூறி யிருந்தது. உலக சுகாதார நிறுவனம் மேலும் சில ஆலோ சனைகளையும் முன்வைத்துள்ளது.

மேலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான கொவிட்-19 பரவல் பற்றி கூடுதல் ஆய்வுகள் நடத்தும்படி அது, உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது.