தொற்று அதிகரிப்பு; விழிப்புநிலையில் ெபய்ஜிங்

பெய்­ஜிங்: சீனா­வில் இன்­னும் சில வாரங்­களில் குளிர்­கால ஒலிம்­பிக் விளை­யாட்டு தொடங்­க­வி­ருக்­கிறது.

இந்­நி­லை­யில் தலை­ந­கர் பெய்­ஜிங்­கில் கொவிட்-19 தொற்று எதிர் பாரா­த­வி­த­மாக அதி­க­ரித்­துள்­ள­தால் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் தேவை­யில்­லா­மல் ஒன்­று­கூட வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கொவிட்1-9 பரி­சோ­த­னை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

புதன்­கி­ழமை அன்று சமூ­கத்­தில் மூவ­ருக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ளதை பெய்­ஜிங் அதி­கா­ரி­கள் உறுதி செய்­துள்­ள­னர்.

இம்­மா­தம் 15ஆம் தேதி­யி­லி­ருந்து பெய்­ஜிங்­கில் கிரு­மிப் பர­வல் கட்­டுக்­குள் இருந்து வரு­கிறது.

இது­வரை பத்­துக்­கும் குறை­வா­னர்­கள் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­களில் சில­ருக்கு டெல்டா, ஓமிக்­ரான் தொற்று உள்­ளது.

இதர நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் பெய்­ஜிங்­கில் பதி­வான தொற்­றுச் சம்­ப­வங்­கள் சொற்­ப­மா­னது.

இருந்­தா­லும் கிருமி பர­வா­மல் இருக்க பெய்­ஜிங் விழிப்­பு­டன் இருந்து வரு­கிறது.

இந்த நிலை­யில் பெய்­ஜிங்­கின் அண்டை ஹெபேய் மாநி­லத்­தில் பிப்­ர­வரி 4ஆம் தேதி குளிர்­கால ஒலிம்­பிக் போட்டி தொடங்­கு­கிறது.

சீனப் புத்­தாண்­டும் வரு­வ­தால் நாடு முழு­வ­தும் தொற்று பர­வ­லாம் என்ற அபா­ய­மும் நில­வு­கிறது.

இதற்­கி­டையே சேமிப்­புக் கிடங்கு ஊழி­யர்­கள் சிலர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் முழு­மை­யாக கொவிட்-19 சோத­னை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் பொருட்­க­ளை­யும் சோத­னை­யிட வேண்­டும் என்­றும் அந்­ந­க­ரத்­தின் அர­சாங்­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் கேட்­டுக்­கொண் டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!